ஜெமினி, வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை கிரண். இவரின் போலி ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் கிரண் கூறியிருப்பதாவது, தனது போலியான ஆபாச வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்தாலோ அல்லது பதிவிறக்கம் செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தனது முகத்தை மார்ஃபிங் செய்து ஆபாச வீடியோவாக பரப்புவதன் மூலம் தான் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.