
தனது படத்தை தயாரிக்க யாருமே முன்வராததால் தானே தயாரிப்பாளராக களமிறங்கி விட முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவிலும் இயக்குனராக களம் இறங்கினார். தன்னுடைய கணவரை வைத்து 3 படத்தை இயக்கி மாஸ் சாதனை படைத்தார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அதன் பிறகு “வை ராஜா வை” படத்தை இயக்கினார். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. கடைசியாக விஷ்ணு விக்ரம் நடிப்பில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தை இயக்கினார்.
ஆனால் இந்த படமும் சுமாராகத்தான் ஓடியது. இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா நடிகர் சித்தார்த்திடம் கதை சொல்லி அவரிடம் இருந்து ஓகே வாங்கிவிட்டாராம். ஆனால் அந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வராததால் தானே தயாரிப்பாளராக களமிறங்கி விட முடிவெடுத்துள்ளாராம்.