ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தி, அரோகரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இந்த போட்டியில் அரோராவுக்கு  ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்காக இலங்கை வீரர் காமிந்து மெண்டிஸ் கொல்கத்தாவுக்கு பேட்டிங் செய்தபோது 13 ஓவர் வீசினார்.

அப்போது கொல்கத்தா தரப்பில் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர்  இருவருமே களத்தில் இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய வெண்டிஸ் ரகுவன்ஷிக்கு இடது கையாளும், வெங்கடேஷ் ஐயருக்கு வலது கையாலும் பந்து வீசி அசத்தினார் . இவருடைய பந்துவீச்சில் அரை சதம் அடித்து அசத்தியரகுவன்ஷி விக்கெட்டை இழந்தார். இந்த போட்டியில் பேட்டிங்கிலும் அசத்திய  மெண்டிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறா.ர் அதாவது ஒரே ஓவரில் இரண்டு கைகளாலும்  பந்து வீசி அசத்திய இவருடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.