தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. இவரது 21 வயதில் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, மகேஷ் பாபு, ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமின்றி நடனம், பேஷன் ஷோ போன்றவற்றிலும் நன்கு அறியப்பட்டவர். இவரின் தாய் ஒரு மருத்துவர் என்பதால் தாயை  பின்பற்ற ஆசைப்பட்டு எம்.பி.பி.எஸ் படித்தார்.

அதன் பிறகு திரைத்துறையை தேர்ந்தெடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு கிஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது. பின்னர் “பெல்லி சண்டாட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும், ஸ்ரீலீலாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவர் சமீபத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக “குண்டூர் காரம்” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவரின் புகழை மேலும் உயர்த்தியது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு குரு என்ற ஆண் குழந்தையையும், சோபித்தா என்ற பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் “பை டு லவ்” என்ற திரைப்படத்தில் குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.