
தமிழகத்திற்கு மோடி வருகை குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில், எங்களை பொறுத்தவரையில் மோடி வருகை குறித்து கவலை இல்லை. தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டது. இது விதி மீறலா ? இல்லையா ? என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். உரிய முறையில் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சியினர் கோரிக்கையும். அதுதான் எங்களது கோரிக்கையும் கூட என தெரிவித்துள்ளார்.