இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மோசடி கடன் செயலிகள் மூலம் மக்கள் பலரும் ஏமாற்றப்படுகின்றனர். இந்த நிலையில் மக்களை ஏமாற்றும் மோசடி கடன் செயலிகளில் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இணையத்தை பயன்படுத்தும் மக்களை தவறாக வழி நடத்துவதுடன் மோசடியில் சிக்க வைக்கும் இது போன்ற விளம்பரங்களை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.