இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய சம்பளப் பணத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகின்றனர். இது ஊழியர்களின் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் இருக்கும். வைப்பு நிதி தொகையிலிருந்து முன்பணத்தை எடுக்க கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வாரியம் அனுமதி வழங்கியது.

இதனால் தற்போது வரை 2.2 கோடி சந்தாதாரர்கள் பிஎஃப் தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைகள் தேவையற்ற செலவாக பயன்படுத்தப்படுவதால் இபிஎப்ஓ வாரியம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி பிஎஃப் தொகையிலிருந்து முன் பணத்தை சந்தாதாரர்கள் பெற முடியாது என்றும் மூன்று ஆண்டுகளில் முறையே 91.6 லட்சம் சந்தாதாரர்கள் 19,126.29  லட்சம் கோடி ரூபாயும் இரண்டு ஆண்டில் 62 லட்சம் சந்தாதாரர்கள் 11,843.23  கோடியும் தொகை திரும்ப பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.