இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கற்ற ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி கைப்பேசி எண் இணைப்புகளை துண்டிப்பதாக வரும் அழைப்புகள் மோசடியானவை என ட்ராய் எச்சரித்துள்ளது.

இவ்வாறு மிரட்டும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதார் எண்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இணையவழி குற்ற தடுப்பு உதவி என்னை 1930 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மோசடி அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.