மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் மோக்கா புயல் இன்று பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மியான்மருக்கும் தென்மேற்கு பங்களாதேஷ் நாட்டிற்கும் இடையே இந்தப் புயல் கரையை கடக்க இருக்கிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 210 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இருநாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல். மணிக்கு 180 முதல் 190 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 21 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.