இன்று தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளில் தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது தமிழ் மொழி உரிமைக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இந்த நாளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்கிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, உலகில் தன் தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழ் இனம். தமிழ் காக்க களமாடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர் நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி நம் உயிரினைய ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார்.