
கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர். ஆனால் திரும்பி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததால் அதனைப் பார்த்து தம்பதியினர் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்பு வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 40 சவரன் நகைகள் திருடு போயிருந்தது.
எனவே இதுகுறித்து தம்பதியினர் இருவரும் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்துவிட்டு தம்பதியினரிடம் விசாரணை நடத்தினனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நகையை திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.