மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இதில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாமக 6 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அத்துடன் தேர்தலில் 4.33 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது.

இதனால் கட்சியிடம் இருக்கும் மாம்பழ சின்னம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்த கேள்விக்கு, தனக்கு எதுவும் தெரியாது என கட்சியின் மூத்த தலைவர் பதிலளிக்காமல் நழுவினார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியை தொடர்ந்து செய்வதறியாமல் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் திகைத்து நிற்கின்றனர்.