ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தற்காத்துக் கொள்ள முடியாமல் லக்னோ அணி திணறியது. போட்டி முடிந்த பிறகு, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர்களுடன் மிகவும் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையாடலின் போது தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் இயக்குநர் டாம் மூடி ஆகியோரும் உடனிருந்தனர்.
Sanjiv Goenka and Rishabh pant 😭 pic.twitter.com/0RzMSkp0vE
— Faiyaz (@FaiyazWhat) April 1, 2026
“>
அணியின் தொடர்ச்சியான சறுக்கல்கள் மற்றும் உத்திகள் குறித்து கோயங்கா மிகவும் சீரியஸாகப் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில போட்டிகளில் லக்னோ அணி சந்தித்து வரும் சரிவுகளைச் சரிசெய்யும் நோக்கில் இந்த ‘கிளாஸ்’ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
