தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

1988-ஆம் ஆண்டு நடிகர் விஜய் சிறுவயதில் நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” என்ற பாடலை இளையராஜா தற்போது பகிர்ந்துள்ளார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், “நாடு காத்திருக்கு” என்ற வரிகள் கொண்ட பாடலை அவர் வெளியிட்டிருப்பது தற்செயலானது அல்ல என இணையவாசிகள் கருதுகின்றனர்.

இந்த பதிவு விஜய்க்குத் தெரிவிக்கும் மறைமுக ஆதரவா அல்லது ஆளும் திமுக அரசைச் சீண்டிப் பார்க்கும் முயற்சியா என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே திரைத்துறையினர் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மே 4 முடிவுகளுக்கு முன்னதாக இளையராஜா எடுத்துள்ள இந்த மூவ், தேர்தல் களத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.