
சமீப நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அடுத்த கட்ட தகவல் வெளியான நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி பாலக்காடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மே 19ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.