மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சிலர் வேண்டுமென்றே உங்கள் மனதை புண்படுத்தும் படி பேசுவார்கள். புதியவரின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கையில் வரும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரிய அணுகுலம் ஏற்படும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பணி சுமை இருக்கும். பேசும்போது பொறுமையாக இருங்கள்.

நிதானமாக செயல்பட்டால் வெற்றி ஏற்படும். அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள். அரசு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக வாழ்வீர்கள். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.

இன்று மாணவர்களுக்கு படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்