மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த கிரேக் பிராத்வேட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக  வெஸ்ட் இண்டீஸ் (CWI) அறிவித்துள்ளது. அதாவது  32 வயதான பிராத்வேட், 39 டெஸ்ட் போட்டிகளில் அணியை நடத்தி, குறிப்பாக 2024-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 27 ஆண்டுகளில் அந்த அணியை முதலாவது வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் பெறச் செய்தார்.

அவரது சேவைக்கு நன்றியை தெரிவித்த CWI, டெஸ்ட் அணியின் வளர்ச்சிக்காக அவரது அர்ப்பணிப்பும், தலைமைத்திறனும் முக்கியமானவை என பாராட்டியுள்ளது. இதற்கிடையே, 31 வயதான விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மனுமான ஷாய் ஹோப், ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்ததைத் தொடர்ந்து, T20 அணிக்கும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு முதல் T20 அணியை வழிநடத்தி வந்த ரோவ்மன் பவெல்லிடம் இருந்து அவர் பதவியை எடுத்துக்கொண்டுள்ளார்.