தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.  விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தபடியாக அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி சில வருடங்களாகவே எழுந்து வந்தது. அதற்கு விஜய் அவர்களே பதில் அளிக்கும் விதமாக தனது இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என கூறும் வகையில், அவரது கையில் துப்பாக்கிய பிடிங்க சிவா என கொடுத்து விட்டு செல்வார்.

இதை துப்பாக்கி திரைப்படம் வெளியான காலகட்டத்திலேயே அவர் முடிவு செய்தது போல் ஒரு சம்பவம் ஒன்று பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் அரங்கேறியுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் அவர்கள் மேடையில் விருது வாங்க ஏற விஜய் அவர்கள் மேடையில் இருந்து கீழே இறங்கி செல்வார். அது பார்க்கையில்,

விஜய் அவர்கள் கோலிவுட் விட்டு கீழே இறங்கி சென்று மக்கள் பணியில் ஈடுபடுவது போலவும், அவர் இடத்தை நிரப்பும் வகையில் சிவகார்த்திகேயன் மேலே ஏறுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

View this post on Instagram

 

A post shared by man’sstorys (@_mansstorys)