
தைவானைச் சேர்ந்த பிரபல பியூட்டி இன்ஃப்ளூயன்சரான ‘Guava Beauty’ (வயது 24) கடந்த மே 24, 2025 அன்று இறந்துவிட்டார் என்பதை அவரது குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைதள பதிவு மூலம் அறிவித்துள்ளனர். “முகத்தில் பூசும் பொருட்களை சாப்பிடும் முக்பாங்” வகை வீடியோக்கள் மூலம் அவர் புகழ் பெற்றிருந்தார். லிப்ஸ்டிக், பிளஷ், ஃபேஸ்மாஸ்க் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களை உணவாக சாப்பிடும் தனித்துவமான காணொளிகள் மூலம் அவருக்கு 12,000-க்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.
அவரது மரணம் குறித்து பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இரசாயனப் பொருட்கள் நிறைந்த மெய்க்-அப்புகளை தொடர்ந்து சாப்பிட்டது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவர் சாப்பிட முடியாத பொருட்களை சாப்பிடும் இந்த விதமான காணொளிகள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு தவறான முன்மாதிரியை உருவாக்கும் என பலரும் அதைப் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
View this post on Instagram
“எங்கள் அழகுப் பெண் Guava Beauty மே 24 அன்று தனது மேக்-அப் உலகத்தை விட்டு விட்டு ஒரு புதிய உலகத்திற்கு சென்று விட்டார்,” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரண செய்தி தைவான் மற்றும் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்க்பாங் வகை காணொளிகள் ஆசியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் ரீல்ஸ் மோகத்தால் மேக்கப் பொருட்களை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர்த்தியுள்ளது.
அதிக வருமானம் மற்றும் ரசிகர்கள் ஈர்ப்பு காரணமாக இளைஞர்கள் அதிக அட்டகாசமான முயற்சிகளில் ஈடுபடுவது ஏனைய சமூக வலைதளங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. Guava Beautyயின் மரணம், சமூக ஊடகங்களில் அதிக கவர்ச்சி அல்லது வித்தியாசமான காட்சிகளுக்காக உயிரை பணயம் வைத்ததை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.