தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் வெளிவந்து 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் அடுத்ததாக மிக பிரம்மாண்டமாக புஷ்பா 2 உருவானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், பகத் பாஸில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

இந்த படம் கடந்த 6-ம் தேதி வெளியான நிலையில் 6 நாளில் ஆயிரம் கோடி வசூலை கடந்த நிலையில் பின்னர் 11 நாளில் 1400 கோடி வசூலை கடந்தது. இதைத்தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் 1508 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படம் பாலிவுட்டில் மட்டும் 618 கோடி ரூபாய் வரை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் இதன் காரணமாக பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் மொத்த வசூல் ஆன 1800 கோடியை முறியடிக்குமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.