சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் அவசரகதியில் தங்களுடைய பணியை நோக்கி ஓடும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் நேரத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனை தடுத்த டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது GPay ஸ்கேனர் ஆகியவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் டிக்கெட்டை எடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களின் முன்பு ஸ்கேனர்கள் வைக்கப்பட்டு பயணிகள் புறப்படும் நிலையம் மற்றும் சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தலாம். இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.