சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மக்களின் வசதிக்காக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பலரும் இருசக்கர வாகனங்களில் தொலைதூரங்களுக்கு செல்வதை தவிர்த்து விட்டு மெட்ரோ ரயில் நிலைய பார்க்கையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதற்கு பார்க்கின் கட்டணமாக ஆறு மணி நேரத்திற்கு 10 ரூபாயும் 12 மணி நேரத்திற்கு 15 ரூபாய் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி ஆறு மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் 20 ரூபாயும் 12 மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் 30 ரூபாயும் பன்னண்டு மணி நேரத்திற்கு மேல் 40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் மாதாந்திர பார்க்கிங் கட்டணம் ஆறு மணி நேரத்திற்கு 750 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.