நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வேகமான போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக ஒரு புகார் எழுந்தது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஒரு 27 வயது வாலிபர் பிடிபட்டார். இவரின் பெயர் திஹந்த். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர் தான் பெண்களின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.

இவர் வேலைக்காக தினசரி மெட்ரோ ரயிலில் செல்லும் போது பெண்களை ஆபாசமான முறையில் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரது செல் போனை பறிமுதல் செய்ததோடு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.