மெக்சிகோ நாட்டில் முதல் ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்றைய தினத்திலேயே மெக்சிகோவின் குரேடாரோ மாகாணத்தில் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது.

இதில் இந்தியர்கள் ஏராளமானோர் பங்கேற்று ராம கீர்த்தனைகளை பாடியுள்ளனர். இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலை இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.