இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வாய்ப்புத் தொகை என்பது 60 வயதிற்கு மேற்பட்ட தனி நபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வட்டி விகிதங்களை கொண்ட காலவைப்பு திட்டமாகும். திட்டத்தின் மூலமாக சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 0.50 சதவீதம் கூடுதல் வட்டி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் காலவரம்பு ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள வங்கிகள் வழங்கும் வட்டி விவரங்களை இதில் பார்க்கலாம்

 

வங்கியின் பெயர் முதிர்வு காலம் FD வட்டி விகிதங்கள்
DCB வங்கி 26 – 37 மாதங்கள் 8.10%
RBL வங்கி 26 – 36 மாதங்கள் 8%
YES வங்கி 36 – 60 மாதங்கள் 8%
பந்தன் வங்கி 3 – 5 ஆண்டுகள் 7.75%
BOB வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.75%
IDFC வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.75%
IndusInd வங்கி 2 ஆண்டு 9 மாதங்கள் – 03 ஆண்டு 3 மாதங்கள் 7.75%
Axis வங்கி 3 – 5 ஆண்டுகள் 7.60%
கோடக் மகேந்திரா வங்கி 3 ஆண்டுகள் 7.60%
பஞ்சாப் நேஷனல் வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.50%
HDFC வங்கி 2 ஆண்டுகள் 11 மாதங்கள் – 3 ஆண்டுகள் 7.50%
ICICI வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.50%