
இனிமேல் பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும். ஏனென்றால் டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனி பயணத்தின்போது மக்கள் 50% அதாவது பாதிக்கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இந்த சிறப்பு வசதியானது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்குரிய பேருந்து டிக்கெட் கட்டணம் 50% குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் மூத்தக்குடிமக்களுக்கும் இவ்வசதி அளிக்கப்படும். இதில் 65 -75 வயதுக்கு உட்பட்ட மூத்தக்குடிமக்கள் பயன் பெறுவார்கள். அதோடு 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஹரியானா மாநிலத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமே இச்சலுகையானது கிடைக்கும். இந்த சிறப்பு வசதி கடந்த ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதேபோல் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர்த்து கர்நாடகா, ஆந்திராவில் மூத்தக்குடிமக்களுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.