
திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா தற்போது காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி சந்தித்த நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்கும் முதல்வர் ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் அனைத்து நெருக்கடிகளையும் தாக்குப்பிடிப்பார். கருணாநிதியை விட ஸ்டாலின் ரொம்ப ஆபத்தானவர் என்று எதிரிகள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு முதல்வர் ஸ்டாலினை கண்டு எதிரிகள் அச்சம் அடைந்துள்ளனர். கருணாநிதியை விட கொள்கை பகைமர்களுக்கு ஆளுமையாக முதல்வர் திகழ்வார். திமுகவுடன் கட்டாயம் இருந்தே ஆகவேண்டும் என்ற சூழல் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது விசிக கட்சிக்கோ கிடையாது. இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் தலைமைக்காக மட்டும்தான் அனைவரும் உடன் இருக்கிறோம் என்றார். அதோடு திமுகவின் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் மூன்றாவது குழல் துப்பாக்கியாக விசிக என்றும் துணை நிற்கும் என்றும் கூறினார்.