தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 6000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவின்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீரை கோபுரத்தின் மீது ஊற்றினர். அப்போது கீழே நின்ற பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை கையெடுத்து கும்பிட்டனர். மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டுள்ளார்.