விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியாக இருந்த நிலையில் அனைவருடைய மனதையும் வென்று டைட்டில் வின்னராக மாறுவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவருடைய வெற்றி வாய்ப்பானது அசீமின் பக்கம் சாய்ந்தது. இந்நிலையில் பிக்பாஸ் விக்ரமனுக்கு எதிராக கிருபா முனுசாமி என்ற பெண் சமூக வலைதளங்களில் பரபரப்பான புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், விக்ரமன் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், ஜாதிய ரீதியாகவும் நடந்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விக்ரமனின் முன்னாள் காதலிகள் என்று கூறிய 15க்கும் மேற்பட்டோரிடம் பேசினேன். அதில்தான் விக்ரமன் பலரையும் ஏமாற்றியது எனக்கு தெரிந்தது. அவர்களில் பலருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் சில ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விக்ரமன் விசிகவில் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.