மூத்த அரசியல் தலைவரும் நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்பியுமான மாஸ்டர் மதன் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் 92 வயதாகும் எவ்வாறு வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் 1998 -99, 1999-2004 வரை 2 முறை மக்களவை எம்பியாக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் படுகர் இனத்தைச் சேர்ந்த இவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குறியவராக இருந்தார். இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு கட்சியை நிர்வாகிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.