கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் “கத்தார் வழங்கிய தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குடும்பத்தினருடனும் சட்ட வல்லுனர்களுடனும் பேசியுள்ளோம். அதேபோன்று தூதரக உதவிகளை அனுப்புவதோடு கத்தார் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” என தெரிவித்துள்ளது.