தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவி. இவருக்கு வயது மூப்பின் காரணமாக திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னுடைய தாயாரை நேரில் சென்று சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதாவது நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய அம்மாவுக்கு  உடல்நலம் சரியில்லாததால் பாதியில் பயணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக சென்னைக்கு நேற்று கிளம்பினார். மேலும் இதே போன்று மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தலைவர்களும் மருத்துவமனைக்கு விரைந்து ஸ்டாலினின் தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.