முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்துவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவை சேர்ந்த 60 மாணவர்களுக்கும், அறிவியல் பாடப் பிரிவை சேர்ந்த 60 மாணவர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வீதமும், மூன்று ஆண்டுக்கு மாதம் 28 ஆயிரம் ரூபாய் வீதமும் 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள் இணையதளம் மூலமாக நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.