இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, நாட்டிலேயே முதல்முறையாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே எதிர்பார்த்த அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என்பதால் நிறுத்தப்படுவதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.