தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட்டிலும் தற்போது அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆக கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகத நிலையில் நடிகர் அஜித் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.