கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் முகமது சாஹின் ஷா. இவருக்கு 26 வயது ஆகிறது. இவர் மணவாளன் அதாவது மாப்பிள்ளை என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். இவர் கடந்த வருடம் கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை தான் கர்நாடகாவில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவருடைய தலைமுடியை வெட்டி தாடியை மழித்தனர்.

இதனால் முகமதுவுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. அதாவது தன்னுடைய முடியை வெட்டியதால் முகமது மிகுந்த கவலை பட்டார். இதனால் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அவரின் பெற்றோர் கூறும் போது தங்களுடைய மகனுக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் முடியை வெட்ட கால அவகாசம் கேட்டபோதிலும் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக முடியை வெட்டியதால் தான் தற்போது மனநலன் பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.