
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்தினா (60). இவரின் மீது பாஜகவை சேர்ந்த 40 வயது பெண் தொண்டர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கொடுத்த புகாரில் தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்கிறேன் என்று முனிரத்னா அவரது அலுவலகத்திற்கு என்னை அழைத்தார்.
நான் அங்கு சென்றபோது இந்த எம்எல்ஏ அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து என்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தார். அதோடு அவர் தன்னுடைய முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஏதோ ஒரு ஊசியை செலுத்தியதாகவும் இதைப்பற்றி வெளியே சொன்னால் உன் மகனை கொன்று விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு குணப்படுத்த முடியாத ஏதோ வைரஸ் உடம்பில் பரவியுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் நான் வேதனை அடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் பின்னர் என்னை சீரழித்த முனிரத்தினா தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது அவர் மீது புகார் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் முனிரத்தினா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஏற்கனவே முனி ரத்னா மீது கடந்த 2020, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் பாலியல் புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.