
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மீண்டும் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இடையில், 250 தொகுதி வரை மட்டுமே முன்னிலை வகித்தது. தற்போது INDIA கூட்டணி 224 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.