தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நிலையில் தற்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்த ராஜமாதா ‌ கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இவர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவருடைய கணவர் விவாகரத்து பெற்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இதனை கிருஷ்ணவம்சி மறுத்துள்ளார். அதாவது தான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருப்பதாகவும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருப்பதாகவும் கூறி அவர் இருவரும் படப்பிடிப்புக்காக தனித்தனியாக இருப்பதை சிலர் தவறாக புரிந்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் பரப்பி வருவதாக கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவருடைய கணவர் விவாகரத்து பற்றி பிரிந்து விட்டதாக பரவிய செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.