கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிபாறை லேபர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மக்கள் அரசு ரப்பர் தொழில் கூடத்தில் ரப்பர் பால் மட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான ரப்பர் பால் மட்டும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று கீரிப்பாறை லேபர் காலனி பகுதிக்குள் நுழைந்து வீட்டு விலங்குகளை வேட்டையாடுகிறது. கடந்த 24-ஆம் தேதி குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை இரண்டு கன்று குட்டிகள் மற்றும் வாத்துகளை வேட்டையாடியது.

நேற்று அதிகாலை குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை கண்ணன் என்பவர் தனது வீட்டிற்கு வெளியே கட்டி போட்டு இருந்த ஆட்டை கடித்தது. விடாமல் கண்ணன் வளர்த்த நாய் குரைத்ததால் சிறுத்தை நாயை கவ்வியபடி அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.