ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் சேத்துனா(3) என்ற பெண் குழந்தை தனது தந்தைக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்துவிட்டது.

இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில தொழில்துறை அமைச்சர் விரைவாக குழந்தையை மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.