தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சரத்குமார் தற்போது 3BHK என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தேவயானி, நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை குருதியாட்டம், 8 இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை சைத்ரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

இந்நிலையில் படக்குழு தற்போது படத்தின் டிரைலர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ ரசிகர்களை தவிர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.