உத்திர பிரதேசம் கிரேட்டர் நொய்டா நகரில் நேஹா ரத்தோர்(வயது 23)என்பவர் வசித்து வந்தார். இவர் ஹாபூர் நகரில் இருந்த சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு ஜாதி என்பதால் நேஹாவின் தந்தையான பானு ரத்தோர் மற்றும் சகோதரர் ஹிமான்ஷு இருவரும் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நேஹா காசியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் என்ற மந்தீரில் தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சூரஜை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கடந்த 12 ஆம் தேதி நேஹாவின் தந்தை மற்றும் சகோதரர் நேஹாவை இழுத்து வந்து கொலை செய்து பின்னர் அந்த உடலை எரித்து ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளார்கள்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாருக்கு நேஹாவின் தந்தை மற்றும் சகோதரர்  இருவருமே அவரை ஆணவக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பானு ரத்தோர் மற்றும் ஹிமான்ஷு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு ஜாதி ஆணை திருமணம் செய்த இளம் பெண்ணை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.