மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலமாக ஹீரோவாக நடித்தவர் தான் மாதம்பட்டி ரங்கராஜன். முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை .இதனை தொடர்ந்து பிசினஸில் ஆர்வம் காட்டினார். சினிமா பிரபலங்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு மாதம் பட்டி ரங்கராஜனை அழைப்பது வழக்கமாக இருக்கிறது. அவர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி ஷோவிலும் நடுவராக கலந்து கொண்டார்.

இந்த நிலையில் மெகந்தி சர்க்கஸ் படத்தின் வெற்றியை அடுத்து ராஜூ சரவணன்- மாதம்பட்டி ரங்கராஜன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.