மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடுசெய்தது  ஆளுநர் மாளிகை. உயர் கல்வித்துறையை ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3:30 மணிக்கு பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கிறார். பொன்முடி ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வித்துறை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக மீண்டும் பதவி ஏற்கிறார் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 3:30 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது

உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் அமைச்சராக பதவி ஏற்க வருமாறு பொன்முடிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ரவி. பதவி பிரமாணம் செய்ய மறுத்ததால் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். பொன்முடிக்கு ஆளுநர் பதவியேற்பு விழா நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரான கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம்.