சென்னை – டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.  இரவு 7.10க்கு வரவேண்டிய ஏர் இந்தியா செய்யப்பட்டுள்ளது விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால்  சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த 252 பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னை – டெல்லி, டெல்லி – சென்னை இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.