
மதுரை மாவட்டத்திலுள்ள தென்கரை அருகே ஒரு அசைவ உணவகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் போன்றவற்றை வாங்கி சிலர் சாப்பிட்டுள்ளனர். அந்த வகையில் பிரசன்னா என்பவர் தன்னுடைய நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அவர்கள் சிக்கன் சாப்பிட்ட நிலையில் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.
அதன் பிறகு ஹோட்டலில் சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை உட்பட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் 22 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 12 பேர் சிகிச்சைமுடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு உணவு மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.