நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது அவசியம். அதன்படி உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வருகிறது.

உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையை ஒரு மிஸ்டு காலில் நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். உங்கள் UAN உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணை அழைத்தால் இரண்டு ரிங்கில் அழைப்பு துண்டிக்கப்படும். பின்னர் உங்கள் மொபைலுக்கு உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் மொத்த pf இருப்பு தொகை குறுஞ்செய்தியாக வந்துவிடும். இந்த மொபைல் எண்ணை அழைப்பதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது.