தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதற்கும் மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மின் இணைப்புடன் ஆதார இணைத்துக் கொள்ளலாம். தமிழக அரசும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், விவசாயிகள்,விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்திற்கு கடந்த ஆண்டு 9,048 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக நான்காயிரம் கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.