வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் அஜிலா பகுதியில் இருக்கும் வார சந்தைக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. ஆனால் இந்தப் பேருந்து சாலையில் வந்த ஒரு வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு வட ஆப்பிரிக்கா நாடுகளில் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. அந்நாட்டில் உள்ள ஏழை மக்கள் பலர் பயணம் செய்ய மினி பேருந்துகளை உபயோகிப்பது வழக்கம் மொராக்கோவில் சராசரியாக வருடத்திற்கு 3500 சாலை விபத்து இறப்புக்கள் பதிவாகிறது. இதன்படி நாளொன்றுக்கு பத்து உயிரிழப்புகள் நடப்பதாக தெரியவந்துள்ளது.